Posts

ஆசிரியரின் கடமைகள்

 எத்தனை மொழி படித்தாலும் தாய்மொழி தமிழ் தான் சிறந்தது என்ற உணர்வையூட்ட. தமிழ் ஒரு தொன்மையான , அழகான , இளமையான மொழி என்பதை மனதில் பதியவைக்க. உலகில் இன்றும் பேச்சு வழக்கில் இருக்கும் ஒரே செம்மொழி தமிழ் தான் என்பதை மகிழ்வுடன் நினைவூட்ட. தமிழின் இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் மற்றும் நூல்களை அறியச் செய்தல். தமிழ் ஏன் செம்மொழி என்பதை எடுத்துக்கூற. தமிழில் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்க. தமிழ்மொழியை ஏன் படிக்கவேண்டும் என்பதை உணர்த்த.

வகுப்பு பற்றிய தகவல்

ஒரு ஆசிரியர் பதினொன்று மாணவர்கள் இருபது நிமிடம் நூலகம் பாடம் வாசித்தல் இலக்கணம் அறிதல்

குறிக்கோள்

நான்காம் வகுப்பு இலக்கணம் மற்றும் வாக்கியம் வாசித்து பொருள் அறிந்து கொள்வதற்கு நுழைவாயில் என்பதை மனதில் பதிய வைத்தல். இலக்கணம் மொழிக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்துதல். வாக்கியங்களை தவறில்லாமலும் பிழையில்லாமலும் எழுவதை உறுதி செய்தல். தமிழர் இசை , நடனம் , பண்பாடு போன்றவற்றை அறியச் செய்தல்.

பெற்றோர் பங்கேற்பு

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முதல் ஆசிரியராக இருக்க வேண்டும். தமிழ் ஏன் படிக்கவேண்டும் என்பதையும் அதன் அவசியத்தையும் உணர்த்த வேண்டும். தமிழ்ப் பள்ளிக்கு வரும் ஆர்வத்தைக் கூட்ட வேண்டும். தினமும் வாசிக்கும் , எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வாக்கியங்களை தவறில்லாமல் படித்து அதன் பொருளை உணரச் செய்யவேண்டும். இலக்கணமும் , வாக்கிய வாசிப்பும் அடுத்தடுத்த நிலைக்கு செல்வதற்கு முதற்படி என்பதை உணர்த்த வேண்டும்.